search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு வக்கீல்"

    அரசு வழக்கறிஞர் வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது என, பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார். #MadrasHighCourt #BalakrishnaReddy
    சென்னை:

    1998ல் கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றும், 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார். தன்னை குற்றவாளி என அறிவித்ததால் தகுதியிழப்பு ஏற்பட்டிருப்பதால் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியிழப்பு ஏற்படுகிறது என்பதற்காக தீர்ப்புக்கு எப்படி தடை கோர முடியும்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

    அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கூட்டமாக சென்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்றே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், பாலகிருஷ்ண ரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை என்றும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு தவறு என்று கூறுவீர்களா? அரசு வழக்கறிஞர் காவல்துறை தரப்புக்காகத்தான் வாதாட வேண்டும்; வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்’ என அறிவுறுத்தினார்.

    அத்துடன் காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

    தீர்ப்பு வெளியானதும் பதவி விலகிவிட்டதால் தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி கேட்டுக்கொண்டார். வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, மதியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். #MadrasHighCourt #BalakrishnaReddy

    நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். #ActorRajkumar #Veerappan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்ட காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 30-7-2000 அன்று சந்தன கடத்தல் வீரப்பன், அவனது கூட் டாளிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மற்றவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.

    இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.



    குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இந்த வழக்கு தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த வழக்கில் அரசு தரப்பில் 47 சாட்சிகள், 51 ஆவணங்கள், 32 சான்று பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விரிவான நகலை பெற்று, இரு மாநில அரசு அதிகாரிகளுடனும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து 9 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்.

    இவ்வாறு வக்கீல் தனகோட்டிராம் கூறினார்.  #ActorRajkumar #Veerappan



    ×